திருவள்ளூரில் வரும் 29ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 29ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 29ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பொதுப்பணி மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.