உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு இடையே நெடுஞ்சாலையின் மைய பகுதியில் உள்ள புற்களை மேய வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில், கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை உள்ளது. இச்சாலை வழியாக தேர்வாய்கண்டிகை சிப்காட், மாதர்பாக்கம், ஆந்திர மாநிலம் சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் பல்வேறு இடங்களில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும், சாலையின் மைய பகுதியில் மாடுகள் மேய்வதையும் காண முடியும். நெடுஞ்சாலையில் தஞ்சமடையும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். குறிப்பாக, குருத்தானமேடு - பூவலம்பேடு வரையிலான சாலையில் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் போது, வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போகின்றனர். எனவே, மாட்டின் உரிமையாளர்களை எச்சரித்து, மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை