உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தனியார் கம்பெனியில் தீ விபத்து

தனியார் கம்பெனியில் தீ விபத்து

திருத்தணி:சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் இரும்பு குழாய் தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம், 1:30 மணியளவில் கொதிக்கலன் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொதிகலன் தீவிபத்தில் சேதம் அடைந்தது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி