மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு
திருவள்ளூர்:திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலக வளாகத்தில், நேற்று தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.பட்டாபிராம் இந்து கல்லுாரி மாணவர்கள் 25 பேருக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்படி, உதவி மாவட்ட அலுவலர் வில்சன்ராஜ், நிலையை அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளித்தனர். தீ மற்றும் பேரிடர்களில் உள்ள வகைகள், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவசர கால தீயணைப்பு மற்றும் மழை போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களையும் செயல்பட வைத்தனர்.