உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பட்டாசு விற்பனை கடை கலெக்டர் அறிவுரை

பட்டாசு விற்பனை கடை கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு விற்பனையாளர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:பட்டாசு விற்பனை செய்வதற்கான கட்டடம் செங்கல் கற்கள் அல்லது கான்கிரீட்டினால் இருக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் இருப்பு வைத்திருக்க வேண்டும். கடைகளின் அருகே பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. கடைக்குள் அல்லது அருகில் திறந்த விளக்குகள், மெழுகுவர்த்தி, தீக்குச்சி மற்றும் தீப்பொறி ஏற்படுத்தும் மின்சாதனம் பயன்படுத்த கூடாது. கல்யாண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. அவசரகால உதவி அழைப்புக்கு 112 மற்றும் அருகாமையில் உள்ள தீயணைப்பு மீட்பு பணி நிலைய தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ள வேண்டும். உரிமம் இன்றி பட்டாசு விற்பனை கடைகள் அமைக்க கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால், ஏ.டி.எஸ்.பி., அரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை