உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரிபுராந்தகர் கோவிலில் கொடியேற்றம்

திரிபுராந்தகர் கோவிலில் கொடியேற்றம்

கூவம்,:திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் நேற்று, ஆடி பிரம்மோத்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர பிரம்மோத் சவ திருவிழா, நேற்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி, துர்கா சுவாமிகள் பவழக்கால் சப்பரத்திலும், இரவு 7:00 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.வரும் 25ம் தேதி தேரோட்டமும், வரும் 29ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறும் என, ஹிந்து சமய அறநிலைய துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை