உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கம்பங்களில் படரும் கொடிகள்; மின்வாரிய அதிகாரிகள் மவுனம்

கம்பங்களில் படரும் கொடிகள்; மின்வாரிய அதிகாரிகள் மவுனம்

ஊத்துக்கோட்டை ; ஊத்துக்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து தொம்பரம்பேடு, தாராட்சி, பேரண்டூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின்கம்பங்கள் அமைத்து, மின்கம்பி வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், தாராட்சி கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளது. இதனால், அவசர காலங்களில் மின்கம்பங்களில் ஊழியர்கள் ஏறி சீரமைக்க முடியாத நிலை உள்ளது.இதுகுறித்து, ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, இப்பகுதிவாசிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, மின்வாரிய உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை