உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொசஸ்தலை ஆற்றில் ரூ.1 கோடியில் வெள்ள தடுப்புச்சுவர் பணி துவக்கம்

கொசஸ்தலை ஆற்றில் ரூ.1 கோடியில் வெள்ள தடுப்புச்சுவர் பணி துவக்கம்

திருத்தணி:கொசஸ்தலை ஆற்றின் கரையோரம், வெள்ள தடுப்புச்சுவர், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டும் பணிகளை, எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார். திருத்தணி அடுத்த என்.என்.கண்டிகை பகுதியில் கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லும் போது, ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால், விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வேர்க்கடலை மற்றும் கரும்பு போன்ற பயிர்கள் சேதமடைகின்றன. இதை தடுப்பதற்கு, என்.என்.கண்டிகை விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆற்றின் கரையோரம் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், ஆற்றின் கரையோரம், 128 மீட்டர் நீளம் வெள்ள தடுப்புச்சுவர் கட்டுவதற்கு, 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளை நேற்று, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் தடுப்புச்சுவர் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, எம்.எல்.ஏ., தன் தொகுதி நிதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், தாழவேடு பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற் குடை அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார். அதேபோல், தாழவேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் திறந்து வைத்தும், சிங்கராஜபுரம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணிகளையும் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை