டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு திருவள்ளூரில் இலவச பயிற்சி
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் - 1 தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள 70 காலி பணியிடம் மற்றும் இம்மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள குரூப் - 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 9ம் தேதி முதல் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்பட உள்ளது.இப்பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. கடந்தாண்டு, இங்கு பயிற்சி பெற்றவர்கள், தற்போது பல்வேறு அரசு துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 63815 52624, 96264 56509 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், இரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அலுவலக நாட்களில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.