உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாயிகளுக்கு இலவசமாக மிளகாய், கத்தரி நாற்று வினியோகம்

விவசாயிகளுக்கு இலவசமாக மிளகாய், கத்தரி நாற்று வினியோகம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் நாற்று இலவசமாக வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் குமரவேல் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் கத்தரி, மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தோட்டக்கலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக வேளாண் தோட்டக்கலை துறையினர், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டு விவசாயிகளுக்கு இலவசமாக இரண்டு லட்சம் மிளகாய், இரண்டுலட்சம் கத்தரி நாற்று தயாராக உள்ளது. இதை பெற விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் ரேஷன் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை