உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

ஊத்துக்கோட்டை:டெங்கு காய்ச்சல் பாதித்து பெண் உயிரிழந்ததை தொடர்ந்து, ராள்ளபாடி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி கிராமத்தில் வசித்து வந்த ஜமுனா, 44, என்ற பெண், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபலட்சுமி இதை மறுத்துள்ளார். நேற்று ராள்ளபாடி கிராமத்தில், பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் தீபலட்சுமி தலைமையில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை