உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து மூதாட்டியிடம் ரூ.3 லட்சம் ஆட்டை

வங்கி மேலாளர் பேசுவது போல் நடித்து மூதாட்டியிடம் ரூ.3 லட்சம் ஆட்டை

தாம்பரம்: மேற்கு தாம்பரம், மீனாம்பாள் சந்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 68. இவர், மதுரை, செங்கப்படை எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கியில் இருந்து, ராஜேஸ்வரிக்கு சில நாட்களுக்கு முன், ஏ.டி.எம்., கார்டு வந்துள்ளது. அந்த கார்டை ஆக்டிவேட் செய்யாமல் வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி ராஜேஸ்வரியின் மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், வங்கி மேலாளர் பேசுவதாகவும், ஏ.டி.எம்., கார்டை ஆக்டிவேட் செய்ய, ஓ.டி.பி., எண் வந்துள்ளது, அதை சொல்லும்படி கூறியுள்ளார். இதை நம்பிய ராஜேஸ்வரி, ஓ.டி.பி., எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து, 75,000 ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. அதேபோல், ராஜேஸ்வரியின், மற்றொரு வங்கி கணக்கு உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின், தாம்பரம் கிளை மேலாளர் பேசுவதாக கூறிய மர்ம நபர், மீண்டும் ஓ.டி.பி., எண்ணை கேட்டு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இருந்து, 2.29 லட்சம் ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். அதன் பின்னரே, மர்ம நபர்கள் ஓ.டி.பி., எண்ணை கேட்டு, தன் வங்கி கணக்குகளில் இருந்து நுாதன முறையில், 3.04 லட்சம் ரூபாயை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து, தாம்பரம்காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து, பணமோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை