உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நல்ல பாம்பு உயிருடன் மீட்பு

நல்ல பாம்பு உயிருடன் மீட்பு

திருத்தணி, வீட்டின் அருகே பதுங்கியிருந்த நல்ல பாம்பை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருத்தணி மகாவிஷ்ணு நகர் பகுதியில் வசிப்பவர் விஜய், 38. இவரது வீட்டின் முன்பகுதியில், 5.5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடுவதை, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கூச்சலிட்டப்படி சென்றனர். இதை தொடர்ந்து, விஜயும் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது, நல்ல பாம்பு இருந்ததை கண்டு, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். திருத்தணி தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து பாம்பை உயிருடன் மீட்டு, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை