மேலும் செய்திகள்
30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் அவதி
09-Sep-2025
ஆவடி:ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் 20 வார்டு, கோபாலபுரத்தில் கிழக்கு, மேற்கு பகுதியில் 2,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிக்கு 15க்கும் மேற்பட்ட தெருக்கள் தோண்டப்பட்டுள்ளன. பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், சமீபமாக பெய்து வரும் மழையால் பாதாள சாக்கடை, குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சகதியாக மாறின. இதனால், வாகனங்கள் சேற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் சாலையை தவிர்த்து, மழைநீர் வடிகால் மீது நடந்து செல்லும் சூழல் உருவாகி உள்ளது. அந்த வகையில், கோபாலபுரம், ஆறாவது பிரதான சாலையில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை, குடிநீர் பணிக்காக சிமென்ட் சாலை தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறி பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
09-Sep-2025