உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் கனமழை எதிரொலி தயார் நிலையில் அரசு துறைகள்

கும்மிடியில் கனமழை எதிரொலி தயார் நிலையில் அரசு துறைகள்

கும்மிடிப்பூண்டி:வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக வலுவடைந்தது. இன்று பிற்பகல் காரைக்கால் -- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.இன்று, திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிபாளையம், மெதிப்பாளையம் கிராமத்தில் உள்ள பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், கரையோரங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நீர்வளத் துறையினர் ஆரணி ஆற்று கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.சாலைகளில் தண்ணீர் தேங்காதபடி வடிகால்வாய்களில், பராமரிப்பு பணிகளை, நெடுஞ்சாலை துறை மற்றும் கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.மின் பாதையில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து காண்காணித்து வருகின்றனர். மழை, புயல் பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்க, கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க, 044 - 2792 1491 மற்றும் 94450 00491 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை