உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி:திருத்தணி தாசில்தார் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என, கண்டன ஆர்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளரும் திருத்தணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாருமான வெண்ணிலா தலைமை வகித்தார். திருத்தணி தாசில்தார் மலர்விழி வரவேற்றார்.இதில், 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டம் கொண்டு வரவேண்டும். கடந்த 21 மாத காலம் நிலுவையில் உள்ள அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் விடுப்பு தொகை வழங்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் காலமுறை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.கடந்த 41 மாதங்களாக பணி நீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களுக்கு பணிக்காலமாக கருதி, ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி