உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

பாதுகாப்பு இல்லாத கழிப்பறை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

பள்ளிப்பட்டு: பள்ளி வளாகத்திற்கு வெளியே சாலையை ஒட்டி, பாதுகாப்பு இன்றி அமைந்துள்ள கழிப்பறையால், அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் அவதிப் பட்டு வருகின்றனர். பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலியில், அத்திமாஞ்சேரி பேட்டை - கே.ஜி.கண்டிகை சாலையில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் கழிப்பறை வசதி இல்லை . பள்ளி வளாகத்திற்கு வெளியே, 100 அடி துாரத்தில், சாலையோரம் உள்ள கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிப்பறைக்கு சுற்றுச்சுவரும் இல்லை. கழிப்பறைக்கு செல்வதற்காக மாணவர்கள் பள்ளி வளாகத்தை தாண்டி வர வேண்டிய நிலை உள்ளதால், பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை