உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஜி.ஆர்.டி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ஜி.ஆர்.டி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

திருத்தணி:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி ஜி.ஆர்.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் அனந்தபத்மநாபன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ஆறுமுகம் வரவேற்று, கல்லுாரியின் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலை இயக்குனர் சண்முகசுந்தரம் பங்கேற்று, பல்கலை அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ