மேலும் செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
08-Dec-2025
திருத்தணி: முருகன் கோவிலில் படித்திருவிழா, வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில் இம்மாதம், 31ம் தேதி படித்திருவிழா, ஜன.,1ம் தேதி புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. அதே போல் முருகன் கோவிலின் உபகோவி லான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் ஜன.,2ல் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் நடக்கிறது. இந்த விழாக்களுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர். இந்நிலையில் நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவிலில், இரு விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்து தருவது குறித்து ஆலோசனை கூட்டம் திருத்தணி ஆர்.டி.ஓ., கனிமொழி தலைமையில் நடந்தது. கோவில் இணை ஆணையர் ரமணி வரவேற்றார். இதில், வருவாய், மின்சாரம், நகராட்சி, தீயணைப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் துறை, சுகாதார துறை உட்பட அனைத்து துறை அலுவலர்கள், கோவில் அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, மோகன், உஷாரவி, நாகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Dec-2025