உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 526 ஊராட்சிகளிலும் மே 1ல் கிராமசபை கூட்டம்

526 ஊராட்சிகளிலும் மே 1ல் கிராமசபை கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உளள 526 ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான மே 1ல் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம், மே 1ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெற உள்ளது.கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், சுயசான்றிதழை அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி பெறுதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணையவழியில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.இக்கூட்டத்தில் ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் பங்கேற்பது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேற்படி கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை