உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிராமிய இசை கலைக்குழு நலச்சங்கம் துவக்கம்

கிராமிய இசை கலைக்குழு நலச்சங்கம் துவக்கம்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் பம்பை, உடுக்கை, கைசிலம்பு மற்றும் கிராமிய இசை கலைஞர்கள் இணைந்து, கலைக்குழு நலச்சங்கம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு விழா, திருத்தணி காந்திநகர் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., முன்னாள் பொறுப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான திருத்தணி எம்.பூபதி பங்கேற்று கலைக்குழு நலச்சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். பின், கிராமிய இசை விழாவில், 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று பம்பை, உடுக்கை, கைசிலம்பு வாசித்து நடனமாடினர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமிய இசை கலைஞர்கள் நடனமாடியதால், காந்திநகர் பகுதியினர் ஏராளமானோர் கலைஞர்களின் ஆட்டத்தை கண்டு ரசித்தனர். இதில், நகர்மன்ற உறுப்பினர் குமுதா கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ