உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மளிகை கடையில் குட்கா பறிமுதல்

மளிகை கடையில் குட்கா பறிமுதல்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் ஊராட்சி யாதவர் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் வேல்முருகன், 45. இவர், கடந்த சில மாதங்களாக குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று காலை போலீசார் கடையில் சோதனை செய்தபோது, நான்கு கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 28,000 ரூபாய். இதையடுத்து, வேல்முருகனை கைது செய்த போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை