மேலும் செய்திகள்
11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது
27-Oct-2025
மக்கள் குறைதீர் கூட்டம் 492 மனுக்கள் ஏற்பு
27-Oct-2025
புனித பயணத்திற்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
27-Oct-2025
1.50 லட்சம் பனை விதை நட திட்டம்
27-Oct-2025
திருவள்ளூர்:அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு தகவல் கிடைத்தது.கலெக்டர் உத்தரவுபடி, திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பெட்டிக்கடை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கர் மற்றும் திருவள்ளூர் டவுன் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பேருந்து நிலையம் அருகே உள்ள மூன்று பெட்டிக்கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. இதையடுத்து, மூன்று கடைகளிலிருந்து ஒரு கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 12,500 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கடை உரிமையாளருக்கு 25,000 ரூபாய் வீதம் மூன்று கடைகளுக்கு 75,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மூன்று கடைகளையும் மூடி 'சீல்' வைத்தனர்.
27-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025