ரூ.50,000 மதிப்புள்ள குட்கா பறிமுதல்
ஊத்துக்கோட்டை: ஆந்திராவில் இருந்து தமிழக பகுதியான கண்ணன்கோட்டை வழியே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்துவதாகபோலீசுக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் சூளைமேனி பகுதியில் தீவிரகண்காணிப்பில்ஈடுபட்டனர்.அப்போது அவ் வழியே வந்த பைக்கை சோதனை செய்ததில், அதில் கட்டு கட்டாக குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.43 கிலோ எடை கொண்ட மதிப்பு, 45,000 ரூபாய்.போலீசார் விசாரித்தபோது, பெரியபாளையம் அடுத்த அழிஞ்சிவாக்கம் சுப்பிரமணி, 60, என்பதுதெரியவந்தது.புகையிலைபொருட்கள், பைக்மற்றும் சுப்பிர மணியை, ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர்.