மேலும் செய்திகள்
11 கிலோ கஞ்சா பறிமுதல் கடத்திய இருவர் கைது
27-Oct-2025
மக்கள் குறைதீர் கூட்டம் 492 மனுக்கள் ஏற்பு
27-Oct-2025
புனித பயணத்திற்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
27-Oct-2025
1.50 லட்சம் பனை விதை நட திட்டம்
27-Oct-2025
மாதவரம் : கும்பகோணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சுதாகர் என்பவரின் ஆட்டோவில் ஏறி மாதவரம் பயணித்தார். மாதவரம் பஜார் அருகே இளம்பெண் கூறிய முகவரியில் யாரும் இல்லை என தெரிந்தது.இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிந்ததால், மாதவரம், பஜார் அருகே ஒரு உள்ள சாந்தி என்பவர் வீட்டில் இறக்கிவிட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி கூறி சென்றார். நேற்று காலை, சுதாகர், சாந்தி ஆகியோர் இளம்பெண்ணை மாதவரம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணைக்கு பின் மாதவரம், புக்ராஜ் தெருவைச் சேர்ந்த இளம்பெண்ணின் தாத்தா சிவகுமார் என்பவருக்கு மாதவரம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, அந்த பெண்ணை அவரது தாத்தா மற்றும் உறவினர் அழைத்து சென்றனர். இளம்பெண்ணை பத்திரமாக மீட்டு உறவினரிடம் சேர்க்க உதவிய ஆட்டோ ஓட்டுனரை அனைவரும் பாராட்டினர்.
27-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025
27-Oct-2025