| ADDED : ஜன 20, 2024 11:24 PM
திருவள்ளூர், திருவள்ளூர் குளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 48. இவர் மனைவி புவனேஸ்வரி, 37. நவீன்குமார், 22, லோகேஷ், 20 என இரு மகன்கள் உள்ளனர்.மனைவி தையல் வேலையும், நவீன்குமார் பி.காம்., படித்து வீட்டில் இருக்கிறார். லோகேஷ் பிளஸ் 2 படித்து விட்டு துணிக்கடையில் பணி செய்து வருகிறார்.வெங்கடேசன் மது அருந்திவிட்டு வந்த அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வைத்து மது குடித்த போது மனைவி புவனேஸ்வரி தட்டி கேட்டுள்ளார்.இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வெங்கடேசன் மதுபாட்டிலை உடைத்து மனைவியை குத்த முயன்றார். இதைப்பார்த்த அவரது மகன் நவீன்குமார், தடுத்தபோது வெங்கடேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அருகிலிருந்த தையல் மிஷின் மேஜையில் தலை இடித்ததில் கையிலிருந்த பாட்டில் வெங்கடேசன் கழுத்தில் குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணிஸ்டாலின் மற்றும் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து, நவீன்குமாரை கைது செய்து திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.