மேலும் செய்திகள்
விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு
05-Oct-2024
சோழவரம்:திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள ஏரியில், சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோழவரம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தலையில்லாமல் இருப்பதை கண்டனர்.எலும்புகள் வெளியில் தெரிந்த நிலையில், சடலம் அழுகிய நிலையில் இருந்தது. சடலத்தை கைப்பற்றி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 20 நாட்களுக்கு முன், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.வேறு பகுதியில் கொலை செய்து, தலையை வெட்டி, உடலை மட்டும் ஏரியில் வீசினரா? அல்லது அதே பகுதியில் கொலை செய்து தலையை தனியாக எடுத்து சென்றனரா எனவும் விசாரிக்கின்றனர்.இறந்தவர் குறித்து அடையாளம் காண முடியாத நிலையில், அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து, காணாமல் போனவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2024