உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பள்ளிப்பட்டில் சுகாதார பாதிப்பு: 30 பேர் அனுமதி

 பள்ளிப்பட்டில் சுகாதார பாதிப்பு: 30 பேர் அனுமதி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு நகரில் வயிற்றுப்போக்கால், 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிப்பட்டு, ராதா நகர், புதுப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டார் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 10 பேர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். 20 பேர் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அம்பிகா நேற்று பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்