உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை கட்டுமான பணி உயர் நீதிமன்றம் தற்காலிக தடை

நிழற்குடை கட்டுமான பணி உயர் நீதிமன்றம் தற்காலிக தடை

திருவள்ளூர்:குளிர்சாதன பேருந்து நிழற்குடை பணிகளுக்கு, உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.திருத்தணி நகராட்சி, கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில், அதிகாலை 4:00 முதல் நள்ளிரவு 11:30 மணி வரை நுாற்றுக்கணக்கான பயணியர் காத்திருந்து பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.இங்கு, நிழற்குடை இல்லாததால் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பயணியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.கடந்த 20 நாட்களுக்கு முன், கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் வசதிக்காக, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், 23.50 லட்சம் ரூபாய் மதிப்பில், குளிர்சாதன நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.தற்போது, நிழற்குடை கட்டுமான பணிகள், 50 சதவீதத்திற்கு மேல் முடிந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளதாக பாதிக்கப்பட்ட இருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிழற்குடை கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !