மேலும் செய்திகள்
உயர் கோபுர மின் விளக்கு காலவாக்கத்தில் பழுது
01-Jun-2025
திருத்தணி:திருத்தணி - சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பீரகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.இங்கு, தினமும் 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், நோயாளிகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர் வசதிக்காக உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.இதை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், ஒன்றரை ஆண்டாக உயர்மின் கோபுர விளக்கு ஒளிராமல் காட்சி பொருளாக உள்ளது.இதனால், இரவு நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் கடும் சிரமப்படுகின்றனர்.எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
01-Jun-2025