உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மழைக்கு முந்தைய பராமரிப்பு நெடுஞ்சாலை துறை மும்முரம்

மழைக்கு முந்தைய பராமரிப்பு நெடுஞ்சாலை துறை மும்முரம்

கும்மிடிப்பூண்டி:மழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகளை, நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலை துறையின் திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, கும்மிடிப்பூண்டியில் மாநில நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலை, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை, புதுவாயல் - பெரியபாளையம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சாலையை ஒட்டியுள்ள ஏரிகளின் உபரிநீர் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை