உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கடன் கொடுத்தவரின் வீடு புகுந்து தாக்குதல்

கடன் கொடுத்தவரின் வீடு புகுந்து தாக்குதல்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவராகபுரம் காலனியை சேர்ந்தவர் அரி, 57. இவருக்கும், வெள்ளாத்துார் காலனியை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இது குறித்து சுப்ரமணி மகன் வினோத் கடந்த 9ம் தேதி அரியிடம் வந்து பேசியுள்ளார். அதற்கு அரி, உன்னுடைய தந்தை சுப்ரமணியை வந்து பேச சொல்லவும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, வெள்ளாத்துார் காலனியை சேர்ந்த திவாகர் மற்றும் அஜித் ஆகியோர், அரி வீட்டிற்கு வந்து, அரி மனைவி சாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கிஉள்ளனர். இதில், காயம் அடைந்த சாந்தி, வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ