உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

திருத்தணி,:திருத்தணி அடுத்த பெரியகடம்பூர் மேல்காலனியைச் சேர்ந்தவர் வஜ்ரவேல் மனைவி லட்சுமி, 57; கூலித்தொழிலாளி. இவர், தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக வீட்டை பூட்டிவிட்டு, அம்பத்தூர் பகுதியில் உள்ள மகள் துர்கா வீட்டில் லட்சுமி தங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று காலை, லட்சுமியின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை அப்பகுதியினர் கண்டனர். இதுகுறித்து லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து லட்சுமி வீட்டிற்கு வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த, 2 சவரன் தங்க நகை, 50,000 ரூபாயை திருடிச் சென்றது தெரிய வந்தது.லட்சுமி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை