உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆம்புலன்சில் குவா... குவா கர்ப்பிணிக்கு பெண் குழந்தை

ஆம்புலன்சில் குவா... குவா கர்ப்பிணிக்கு பெண் குழந்தை

திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகரைச் சேர்ந்தவர் ஜெயசுகநாதன் மனைவி பூர்ணிமா, 28. கர்ப்பிணியான இவருக்கு, நேற்று காலை பிரசவ வலி ஏற்படவே, '108' ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.ஆனால், திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் அருகே பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டு, ஓட்டுனர் லோககுமார் மற்றும் மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின் குழந்தையும், தாயும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளரை பூர்ணிமாவின் உறவினர்கள பாராட்டி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ