உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாம்பாக்கம் அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

மாம்பாக்கம் அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 15 மாணவ - மாணவியர் கல்வி பயில்கின்றனர். இங்கு வகுப்பறை கட்டடங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்ட ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டு பணி முடிந்தது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை வகிக்க, ஊராட்சி தலைவர் அசோக்குமார், தி.மு.க., ஒன்றிய செயலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் மற்றும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை