உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சர்வீஸ் சாலையில் தவறான வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

 சர்வீஸ் சாலையில் தவறான வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்

திருவள்ளூர்: திருநின்றவூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்குளம் அருகில் தவறான திசையில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால், வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்றனர். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம், திருவள்ளூர் வரை அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்றவூர் தனியார் ஸ்டீல் கம்பெனி அருகே இணைக்கும் பணி, 364 கோடி ரூபாய் மதிப்பில், 2022ம் ஆண்டு துவங்கியது. திருவள்ளூர் - திருநின்றவூர் வரை, 17.5 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இச்சாலையில் இருந்து தலக்காஞ்சேரி, தண்ணீர்குளம் உட்பட பல்வேறு இடங்களில், அருகே உள்ள ஊர்களுக்கு வாகனங்கள் செல்லும் வகையில், 'சர்வீஸ்' சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சர்வீஸ் சாலை துவங்கும் இடங்களில், வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வதற்காக, சாலையோரம் பெயர் பலகை அமைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு, தண்ணீர்குளம் பிரிவு அருகில் அமைக்கப்பட வேண்டிய வழிகாட்டி பலகை, அச்சாலை முடிவடையும் இடத்தில் தவறாக அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, திருநின்றவூர் பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், தண்ணீர் குளம், புட்லுார் மற்றும் காக்களூர் கிராமத்திற்கு செல்ல வழி தெரியாமல் குழப்பமடைந்து வருகின்றனர். எனவே, வழிகாட்டி பலகையை, தண்ணீர்குளம் திரும்பும் பிரிவு சாலை அருகில் அமைக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திற்கு, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ