உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடில் உழவு பணிகளுக்கு காளை மாடுகள் பயன்பாடு அதிகரிப்பு

திருவாலங்காடில் உழவு பணிகளுக்கு காளை மாடுகள் பயன்பாடு அதிகரிப்பு

திருவாலங்காடு,திருவாலங்காடு பகுதியில் நவரை பருவத்தில் உழவு பணிகளுக்கு, டிராக்டருக்கு பதிலாக மீண்டும் காளை மாடுகளை விவசாயிகள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை விவசாயத்தில் காளைகளின் பங்களிப்பு அதிகம். வயல்களுக்கு விதை நெல், உரம், விவசாய கருவிகள் கொண்டு செல்ல, ஆட்களை ஏற்றிச் செல்ல, அறுவடை செய்த வயல்களில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வர மாட்டு வண்டிகளும், அவற்றை இழுக்க காளை மாடுகளும் இருக்கும்.டிராக்டர், பவர் டில்லர் வந்த பின், உழவு மாடுகள் பயன்பாடு குறைந்து விட்டது. பெரும்பாலான கிராமங்களில் உழவு மாடுகள் வளர்ப்பே இல்லை. மாட்டு வண்டிகளும் காலப்போக்கில் மறைந்து விட்டதால், உழவு மாடுகள் வளர்ப்பும் மறைந்து விட்டது.இந்நிலையில், திருவாலங்காடு அடுத்த சக்கரமநல்லுார், பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில், தற்போது பழைய முறையிலேயே காளை மாடுகளை பயன்படுத்தி உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள துவங்கி உள்ளனர்.உழவு மாடு வைத்துள்ள விவசாயிகள் கூறியதாவது:உழவு மாடுகளை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளும் போது, மாடுகளின் சாணமும் உரமாக மாறி விடும்; இயற்கை உரமாக இருப்பதால் விளைச்சலும் நன்றாக இருக்கும்.ஒரு ஏக்கர் உழவு செய்ய, 1,400 ரூபாய் வாங்குகிறோம்; மூன்று மணி நேரத்தில் ஒரு ஜோடி மாடுகளை வைத்து உழவு செய்யலாம். இதே உழவு டிராக்டர் என்றால் 3,000 ரூபாய் வரை செலவாகும். மாடுகளை பயன்படுத்தும் போது நன்கு ஆழமாக உழவு செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை