உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் நல திட்டத்திற்கு முக்கியத்துவம் திருவள்ளூர் புதிய கலெக்டர் தகவல்

மக்கள் நல திட்டத்திற்கு முக்கியத்துவம் திருவள்ளூர் புதிய கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:''மக்கள் நல திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுவேன்,'' என, திருவள்ளூரில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.திருவள்ளூர் கலெக்டராக இருந்த பிரபுசங்கர், சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் துணை செயலர் பிரதாப் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, அவர் நேற்று, திருவள்ளூர் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட மக்களின் நலத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பணிபுரிவேன். மக்கள் குறைதீர் கூட்டம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு அறிவித்துள்ள மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும், அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை எடுத்துரைக்க அலுவலக நேரத்தில், என்னை எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.புதிதாக பொறுப்பேற்ற கலெக்டரை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக, நேற்று காலை, கலெக்டர் பிரதாப், திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார். அப்போது திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, இணை ஆணையர் ரமணி, தாசில்தார் மலர்விழி ஆகியோர் வரவேற்றனர்.பின், கலெக்டர் பிரதாப், கொடிமரம், ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகர் ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார்.அதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் புதிய கலெக்டருக்கு கோவில் பிரசாதம், முருகன் படம் வழங்கி வாழ்த்துக் தெரிவித்தனர். அப்போது, திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை