உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பவானியம்மன் கோவிலில் காலை உணவு திட்டம் துவக்கம்

பவானியம்மன் கோவிலில் காலை உணவு திட்டம் துவக்கம்

பெரியபாளையம்:தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு நடைபெறும் ஆடி மாத திருவிழாவில், முதல் வார ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 13 வாரங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர். இக்கோவிலில் பக்தர்களுக்கு மதிய வேளைகளில் மட்டும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த திட்டத்தை தினமும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திட்டத்தை துவக்கி வைத்தார். இதன்படி, பக்தர்களுக்கு காலையில் டிபன், மதியம் சாப்பாடு என, மாலை வரை அன்னதானம் வழங்கப்படும். இந்த திட்டத்தை, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு செய்து, பக்தர்களுக்கு தேவையான அளவு உணவு வழங்க அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை