கால்நடைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய நான்கு இடங்களில் கால்நடை உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம், 1084 வருவாய் கிராமங்களில், 1.50 லட்சம் விவசாயிகள் கால்நடைகள் வளர்த்துபராமரித்து வருகின்றனர். இதில், 3.33 லட்சம் கறவை பசுக்கள் மற்றும் மாடுகள், 2.42 லட்சம் ஆடுகள், 63 ஆயிரத்து 164 செம்மறி ஆடுகள், 7.56 லட்சம் கோழிகள், நாய், பூனை, பன்றி என 773 விலங்குகள் வளர்த்து வருகின்றனர்.இவைகளுக்கு, ஐந்து கால்நடை மருத்துவமனை, 88 கால்நடை மருந்தகங்கள், 36 கிளை நிலையங்கள் வாயிலாக சிகிச்சை மற்றும் ஆண்டுக்கு இருமுறை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டுவருகிறது. கால்நடைகள்எண்ணிக்கை குறித்து,5 ஆண்டுக்கு ஒரு முறைகணக்கெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணிகள் இம்மாதம் முதல் துவங்கி வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க மாவட்ட கால்நடை துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்களுக்கு கால்நடை உதவி இயக்குனர் மூலம் கால்நடைகள் கணக்கெடுப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.தற்போது, மேற்பார்வையாளர்கள், 210 ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். வரும், 1 ம் தேதி முதல் கிராமங்கள், நகரங்களில் கால்நடைகள்குறித்து கணக்கெடுக்கும் பணிகள் துவங்க உள்ளன.மாவட்ட கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கால்நடைகள் கணக்கெடுப்பதின் மூலம் தேவைகேற்ப மருந்தகம், கிளை நிலையங்கள் உருவாக்கி சிகிச்சை அளிக்க முடியும். மருந்து, மாத்திரைகள் கொள்முதல் அதிகரிக்கப்படும். இந்த கணக்கெடுப்பின் உதவி இயக்குனர்கள் தலைமையில், மாவட்டம் முழுவதும், 210 பேர் ஈடுபடவுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் கணக்கெடுக்கும் பணி முடித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு கால்நடை கணக்கெடுப்பு விவரம் அனுப்பிவைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.