திருத்தணி அரசு மருத்துவமனை பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில், 45 கோடி ரூபாயில், தரைத்தளத்துடன் ஐந்து அடுக்கு கொண்ட புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த கட்டடத்தில் மூன்று அறுவை சிகிச்சை அறைகள், சி.டி.ஸ்கேன், எம்.ஐ.ஆர். ஸ்கேன், ஆய்வகம், புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவு மற்றும் 300 படுக்கைகள் கொண்ட அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.நேற்று திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனர் மீரா புதிய கட்டடத்தில் ஆய்வு செய்தார். அவரை திருத்தணி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதிகாதேவி வரவேற்றார்.பின், பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை உதவி செயற்பொறியாளர் முரளி மற்றும் உதவி பொறியாளர்கள், புதிய மருத்துவமனை கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து இணை இயக்குனரிடம் விளக்கி கூறினார்.இணை இயக்குனர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.