உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கட்சி கொடி கம்பங்களை அகற்றாதது அரசியல் கட்சியினரின் அழுத்தமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

கட்சி கொடி கம்பங்களை அகற்றாதது அரசியல் கட்சியினரின் அழுத்தமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், மணவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், அரசியல் கட்சியினரின் சார்பில் அமைக்கப்பட்ட கொடி கம்பங்களை உள்ளாட்சி அமைப்புகள் அகற்றவில்லை. தாமாக முன்வந்து அகற்றி கொள்வதாக உறுதியளித்த தி.மு.க.,வும் தற்போது வரை அகற்றவில்லை.கொடிக்கம்பங்களை அகற்ற உள்ளாட்சி நிர்வாகமோ, அரசியல் கட்சிகளுக்கு கடிதம் மட்டும் எழுதி விட்டு, மவுனம் காத்து வருகிறது. இதற்கு, அரசியல் கட்சியினரின் மறைமுக அழுத்தம் காரணமா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஊரக, நகர் பகுதியில் எங்கெங்கு கொடிக்கம்பங்கள் இருக்கின்றன; அரசியல் கட்சிகள் சார்ந்தவை எத்தனை, ஜாதி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்ந்த கொடிக்கம்பங்கள் எத்தனை என்கிற கணக்கீடு கூட எடுக்கப்படவில்லை. கட்சி தலைமை கூறியிருப்பதால், நாங்களே முன்வந்து கொடிக்கம்பங்களை அகற்றி விடுவோம் என, தி.மு.க., நிர்வாகிகள் கூறியிருந்தனர்.அதன்படி, தி.மு.க.,வினரும் கொடிக்கம்பத்தை அகற்றவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதுடன், தி.மு.க., உட்பட எந்த கட்சிகளுக்கும் ஆணை பொருந்தாதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர், ஒன்றிய ஊராட்சி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி