| ADDED : டிச 28, 2025 06:37 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு --- அரக்கோணம் மாநில நெடுஞ்ச்சாலை விரிவாக்கத்தின் போது பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. சாலை அமைத்து ஓராண்டு ஆன நிலையில் இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை இதனால் பயணியர் அவதியடைந்து வருகின்றனர். திருவாலங்காடு ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை 2023ம் ஆண்டு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக திருவாலங்காடு, வீரராகவபுரம், வியாசபுரம், புண்டரீகபுரம் வரை இருந்த 7 பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ஆனால், பணிகள் முடிந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு சாலை வந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில், மீண்டும் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படவில்லை. இதனால், மழை, வெயில் காலங்களில், பேருந்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். இந்நிலையில் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்ட கிராமங்களில் மீண்டும் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.