புட்லுார் ரயில் நிலையத்தில் பணம் பறித்தவருக்கு சிறை
புட்லுார், புட்லுார், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூக்கு முத்து கொண்டையா, 45. இவர், நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில் புட்லுார் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்தார்.அப்போது மர்ம நபர் ஒருவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போன் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், மொபைல்போன் மற்றும் பணம் பறித்தவர், சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 30, என, தெரிய வந்தது.இதையடுத்து, மணிகண்டனை திருவள்ளூர் ரயில்வே போலீசார், கைது செய்தனர்.