உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

பொன்னேரி, பொன்னேரி அடுத்த, தேரடி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60; மண்பாண்ட தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இவரை கவனித்து கொள்வதற்காக குடும்பத்தினர் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவதால், பெரும்பாலான நேரம் வீடு பூட்டியே கிடக்கிறது.இந்நிலையில், நேற்று காலை, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீடு திறந்து கிடந்தது. இதை கண்டு, அருகில் வசிப்பவர்கள் வெங்கடேசனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.மருத்துவமனையில் இருந்து திரும்பியவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, ஏழு சவரன் நகை, 10,000 ரூபாய் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிந்தது.பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ