உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு வீடுகளில் நகை திருட்டு

இரு வீடுகளில் நகை திருட்டு

பொன்னேரி:மீஞ்சூர், புங்கம்பேடு பகுதியில் வசிப்பவர் விநாயகமூர்த்தி, 70. நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு பட்டமந்திரியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பிய போது முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, 1,000 ரூபாய், இரண்டரை சவரன் நகைகளை திருடி சென்றனர்.அனுப்பம்பட்டு, செல்லியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குமார், 50. நேற்று அவரது மனைவி வீட்டை பூட்டிக்கொண்டு கடை சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியபோது, முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, 60 ஆயிரம் ரூபாய், இரண்டு சவரன் நகைகளை திருடி சென்றனர்.மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ