உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகை திருடியவர் கைது

நகை திருடியவர் கைது

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த, கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 47; விவசாயியான இவர், நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல விவசாய பணிக்கு சென்றார். மனைவி சாந்தி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.மாலை வீட்டிற்கு திரும்பிய முனுசாமி வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அலமாரியில் பையில் வைத்திருந்த 14 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது.இது குறித்து முனுசாமி, அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், காட்பாடி அடுத்த, கொடுக்கந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் உறவினரான சதீஷ், 25, என்பவர், நேற்று முன்தினம் மதியம் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் சதீஷை பிடித்து விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்த 14 சவரன் நகையை திருடியது தெரியவந்தது.இதையடுத்து நேற்று, சதீஷிடம் இருந்து நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ