உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி கொண்டஞ்சேரி சுடுகாடு

பராமரிப்பின்றி கொண்டஞ்சேரி சுடுகாடு

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் இறந்தவர்களை தகனம் செய்வதற்காக கொண்டஞ்சேரி - திருப்பாச்சூர் நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்ட சுடுகாடை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்துள்ளன. இறந்தவர்களை எரியூட்டும் மேடை பகுதி சேதமடைந்துள்ளது. மேலும் சுடுகாடு பகுதியில் சாலை, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் சுடுகாடு பகுதியை சீரமைத்து தர வேண்டும் என, கொண்டஞ்சேரி பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை