உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம்

சுற்றுலா பயணிகளை கவரும் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம், கார்வேட்நகரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த கோடை காலத்திலும், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கம், தண்ணீர் நிரம்பி கடல் போல் காணப்படுகிறது.திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தண்ணீர் நிரம்பியுள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தின் அழகை ரசிக்க தினமும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், குசா ஆறாக பாய்ந்து, பள்ளிப்பட்டு அருகே லவா ஆற்றுடன் இணைந்து கொசஸ்தலை ஆறாக பாய்கிறது.கொசஸ்தலை ஆற்றின் நீராதாரமான கிருஷ்ணாபுரம் நீர்தேக்கத்திற்கு, கார்வேட்நகரம் பகுதியில் உள்ள மலைத்தொடரில் இருந்து நீர்வரத்து உள்ளது. கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தின் கிழக்கில் உள்ள மலையில் இருந்து, நீர்த்தேக்கத்தின் முழு அழகையும் ரசிக்க முடியும்.நீர்த்தேக்கத்தின் மேற்கு மற்றும் கிழக்கில் இரண்டு பேபி கால்வாய்களும் அமைந்துள்ளன. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது இல்லை.நீர்த்தேக்கத்தின் மேற்கில் உள்ள பேபி கால்வாய் வழியாக, கிருஷ்ணாபுரம் சுற்றுப்பகுதியில் விவசாயத்திற்காக மட்டும் குறைந்தளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.கோடை மழை பெய்து நீர்த்தேக்கம் முழுதுமாக நிரம்பினால், கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை