உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆதி சங்கரர் கோவிலில் கும்பாபிேஷகம் விமரிசை

ஆதி சங்கரர் கோவிலில் கும்பாபிேஷகம் விமரிசை

ஊத்துக்கோட்டை: குருவயல் ஸ்ரீ ஆதிசங்கரர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று விமரிசையாக நடந்தது.சென்னை, அம்பத்துாரில் ஜகத்குரு ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது. இதன் நிறுவனர் சந்திரமவுலி ஸ்ரவுதிகள்.கடந்த, 2012ல் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், இந்த பாடசாலைக்கு வருகை தந்தார். அப்போது, இந்த அமைப்புக்கு பெரிய வளாகம் ஏற்பட ஆசி வழங்கினார்.அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த குருவாயல் கிராமத்தில் ஜகத்குரு ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் அமைப்பு இயங்கி வருகிறது. இதன் சார்பில் ஸாம வேத பாடசாலையும், சாஸ்திர பாடசாலையும் செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான மாணவர்கள் வேதம் பயின்று பண்டிதர்களாகதிகழ்கின்றனர்.இந்நிலையில், இந்த பவனத்தில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு கோவில் அமைக்க, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கான பொறுப்பு, சென்னை ஸ்ரீ வித்யா தீர்த்த பவுண்டேஷனிடம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த, 2021 டிச., 2ம் தேதி சிருங்கேரி மடாதிபதிகளின் ஆசியோடு, நெரூர் ஸ்ரீ வித்யா நரசிம்ம ஆசிரமத்தை சார்ந்த ஸ்ரீ வித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகளால் அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பணிகள் பூர்த்தியான நிலையில் நேற்று காலை கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. கோவிலில் வைக்கப்பட்ட புதிய விக்ரகத்தை, சிருங்கேரி சாரதா பீடாதிபதிகளான பாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோர் பூஜித்து வழங்கி உள்ளனர். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, பூர்வாங்க பூஜைகள் நேற்று முன்தினம் காலை, 7:30 மணி முதல் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, யந்திர ஸ்தாபனம், ஆதிசங்கரர் விக்ரஹ அஷ்டபந்தன ஸ்தானம் நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு பூஜைகள் துவங்கி, காலை, 9:00 மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. இதுதொடர்பான கல்வெட்டை நெரூர் ஸ்ரீவித்யா நரசிம்ம ஆசிரமத்தை சேர்ந்த ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதிசுவாமிகள் திறந்து வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் நீதிபதிகள் ராமநாதன், வித்வான்கள் ஸ்ரீனிவாசன், ஸ்ரீராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர். மதியம் 12:15 மணிக்கு ராமஜென்ம பூமி ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி அயோத்தியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஸ்ரீவித்யா தீர்த்த பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீவேத காவ்ய வித்யா பவனம் ஒருங்கிணைந்து செய்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை